Mayu / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்தியத்திற்குட்பட்ட நிந்தவூர் அல்லிமூலை பகுதியில் பாரிய நீர்க்குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.
இதனால் நிந்தவூர் காரைதீவு சாய்ந்தமருது பிரதேசங்களில் குழாய் நீர் விநியோகம் புதன்கிழமை (27) 24 மணி நேரம் முற்றாக தடைப்பட்டிருந்தது.
24 மணி நேரம் அடைமழைக்கு மத்தியில் நீர் விநியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் பலத்த அசௌகரியத்துக்கியிருந்தனர்.
இதற்கமைய, தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு பொறுப்பான இயந்திரவியல் பொறியியலாளர் தாமோதரம் விநாயகமூர்த்தி தலைமையிலான ஊழியர்கள் திருத்தப்பணியில் ஈடுப்பட்டிருந்த நிலையில் 24 மணி நேரத்தின் பின்னர் குழாய் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது.


9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago