Janu / 2023 ஜூன் 04 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு காரைதீவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 26 நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து (2.6.2023) காரைதீவிற்கு வருகைதந்த போது மஞ்சள் நீரால் கால்கழுவி பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதயாத்திரை குழுவின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ், நீராகாரம் வழங்கிய முருகபக்தர் எஸ்.தேவதாஸ் ஆகியோர் பெருவரவேற்பளித்தனர். பின்னர் அவர்கள் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை தரிசித்து காரைதீவில் முழுநாளும் தங்கியிருந்தனர்.
எதிர்வரும் 11ஆம் தேதி உகந்தை மலையை அடைந்து 12ஆம் தேதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025