Janu / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பிரதேசத்தில் பாரிய அளவில் டெங்கு குடம்புகள் பரவியுள்ள இடமொன்றை பொலிஸாரின் பூரண ஒத்துழைப்புடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஞாயிற்றுக்கிழமை (27) அன்று சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான நீர்த்தாங்கி ஒன்றினுள் பெருமளவு டெங்கு குடம்புகள் உற்பத்தியாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக தூய்மைப்படுத்தாது காணப்பட்ட இந்நீர்த்தாங்கியில் பெருமளவு டெங்கு குடம்பிகள் காணப்பட்டன.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் ஸ்தலத்திற்கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்த டெங்கு குடம்பிகள் பரவும் வகையில் வைத்திருந்த இடத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குறித்த இடத்தில் சிவப்பு எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன் மூன்று தினங்களுக்குள் குறித்த இடத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி சுகாதார பரிசோதகர்களுக்கு காண்பிக்க வேண்டும் அதையும் மீறி இவ்வாறு டெங்கு குடம்புகள் பரவும் வகையில் இடத்தை வைத்திருந்தால் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பரிசோதனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ரீ.எல். ஜவ்பர்கான்

28 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago