Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய ஒருவக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்து 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம் ஹம்சா நேற்று முன்தினம் (27) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் மூன்று மாதங்களுக்கு முன்னர், ஒன்பது கிராமும் 850 மில்லி கிராமும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, மூன்று மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்படார்.
இதைத் தொடர்ந்து கடந்த முறை காணொளி மூலமாக, அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் குறித்த குற்றச்சாட்டை குற்றவாளி ஏற்றுக் கொண்டதை அடுத்து, அவரது அடையாள மற்றும் தண்டணைத் தீர்ப்புக்காக செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவருக்கு ஒருவருட சிறைத் தண்டணை விதித்து முதல் ஆறு மாத கடுழிய சிறைத்தண்டனையும் மிகுதி ஆறு மாத கால சிறைத் தண்டணையும் ஏழு வருட காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபதாரமாகச் செலுத்துமாறு நீதவான் தீர்ப்பளித்தார்.
18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago