Janu / 2026 மார்ச் 10 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் அதன் வங்கி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் சிறப்பு நிகழ்வு திங்கட்கிழமை (09) வங்கி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மார்ச் 08 முதல் மார்ச் 31 வரையான காலப்பகுதியை "மகளிர் சேமிப்பு மாதமாக" அறிவித்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் சேமிக்கும் பெண்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் "திரியமாதா" மகளிர் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யும் பெண்களுக்கு வங்கியினால் வழங்கப்படும் பரிசுப் பொருட்களுடன், சாய்ந்தமருது "அக்ஸா பேஷன் மால்" (Aqsa Fashion Mall) நிறுவனத்தினால் ரமழான் பெருநாளை முன்னிட்டு 30 சதவீத விலைக் கழிவு கூப்பன்களும் வழங்கி வைக்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகவும், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ. முவபிக்கா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். றிபாயா மற்றும் வங்கி கட்டுப்பாட்டுச் சபை தவிசாளர் எம்.ஐ. ஜூனைதா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, சேமிப்பாளர் பெண்களுக்கு 30 சதவீத விலைக் கழிவு கூப்பன்களை வழங்குவதற்காக சமுர்த்தி வங்கிக்கும் "அக்ஸா பேஷன் மால்" நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சேவையை வழங்க முன்வந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சீ.எம். ஜெலீல் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மகளிர் தினத்தை முன்னிட்டு, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கட்டுப்பாட்டுச் சபை பெண் உறுப்பினர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வங்கியில் வைப்புச் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிதிகளால் பரிசுகளும் கூப்பன்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தச் சேமிப்பு மாதத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் சேமிக்கும் பெண்களுக்கு இரட்டிப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்







2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago