2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

மட்டு.பிறப்பு மற்றும் திருமண பதிவுக்கான நடமாடும் சேவை

R.Tharaniya   / 2025 நவம்பர் 12 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த  பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது புதன்கிழமை (12) அன்று பிரதேச  செயலாளர் உ.உதசிறீதர் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இதுவரை காலமும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்றுக்கொள்ளாத சுமார் 50 இற்கும் மேற்பட்டோருக்கான பதிவு சான்றிதழ்களை அவ்விடத்திலேயே வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கிழக்கு வலயத்துக்கான பிரதிப் பதிவாளர் நாயகம் கே.நடராஜா, மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் பா.பரசுராமன், பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கே.பேரின்ப நாயகம், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் வழங்கியிருந்தது. இந்த நடமாடும் சேவையினை பிரதேச செயலக பதிவாளர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.சக்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X