2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மட்டு. சீயோன் தேவாலயத்தில் 6 வது ஆண்டு நினைவேந்தல்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைப்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (21) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் ஏற்பாட்டினை அடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு காலை 9.05 தேவாலயத்தின் முன்பகுதியில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி  நிமிட அஞ்சலி மௌன செலுத்தினர்.

இந்த நினைவேந்தலையிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு கடமையில் பொலிஸார் விமானப்படையினர் ஈடுபட்டதுடன் இந்த தற்கொலை குண்டு தாக்குதலில்14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்து குறிப்பிடத்தக்கது.

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் (21) நினைவு கூறப்பட்டது.

அபு அலா, துஷாரா, 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X