Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 29 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) அன்று திடீரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்த இதையடுத்து மட்டு நகர சபை தீயணைப்பு படையினர் குருக்கள்மடம் இராணுவத்தினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று பகல் 12.00 மணியளவில் அந்த பகுதியில் உள்ள புல் தரைகளில் பற்றி தீ பரவத் தொடங்கியதுடன்,பனை மரங்கள் மற்றும் மரங்களில் பற்றியதுடன் புகையிரத என்ஜின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத எரிபொருள் தாங்கி வைக்கப்பட்டிருக்கும் பதியை நோக்கி தீ பரவத் தொடங்கியது.
இதையடுத்து மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர உறுப்பினர்கள் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .