2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மனநலம் பாதிக்கப்பட்டவரின் தாக்குதலால் ஒருவர் படுகாயம்

Janu   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவர் கத்தரிக்கோலால் குத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் சனிக்கிழமை  (27) இடம்பெற்றுள்ளது.

எதிர்பாராத நிலையில் , நின்றுக்கொண்டிருந்த  நபர் ஒருவர்  மீது  மனநலம் பாதிக்கப்பட்டவர்  திடீரெனெப் பாய்ந்து   தன்வசம் வைத்திருந்த கத்தரிக்கோலால் முதுகுப் பகுதியில் குத்தியுள்ளார்.

இச்  சம்பவத்தில்  காயமடைந்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், மனநலம் பாதிக்கப்பட்ட நபரை  கைது செய்ய  வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .