2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மலாக்கா ஆளுநர் கல்முனை மாநகருக்கு விஜயம்

Freelancer   / 2023 ஜனவரி 06 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் நேற்று முன்தினம் (04) மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார். 

இதன்போது, கல்முனை மாநகர மேயர் ஏ.எம் றகீப் தலைமையில் உறுப்பினர்கள், அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் இரு தரப்பு புரிந்துணர்வு தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

மலாக்கா ஆளுநருடன் மலேசிய பல்கலைக்கழக உபவேந்தர் போராசிரியர் அப்துர் ரஸ்ஸாக் பின் இப்றாஹிம், மலேசிய இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஏ.எம் ஜெமீல் உட்பட மலேசிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது, மலாக்கா ஆளுநரின் கல்முனை விஜயத்துக்கு மதிப்பளித்து, மேயரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மியால் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X