Freelancer / 2023 ஜனவரி 06 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருள் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங்’ ‘மாணவர் மகிமை’ வேலை திட்டத்தின் கீழ், தேவையுடைய மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகளை நேற்று (05) வழங்கிவைத்தது.
‘நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங்’ சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எம் நிஸ்மி தலைமையில் நிந்தவூர் அல் அஷ்ரக் கனிஷ்ட பாடசாலை மாணவ, மாணவியர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், பாடசாலை அதிபர் எம் ஹபீபுல்லாஹ், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago