2025 மே 14, புதன்கிழமை

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு

Editorial   / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (12) சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கட்டுரை, பேச்சு மற்றும் நாட்டுப்புற பாடல் ஆகிய போட்டிகளில்  பங்குபற்றி முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதன்போது மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய, தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உதவியாளர் ஏ.எம். இர்பான், மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .