Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 செப்டெம்பர் 06 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (06) அதிகாலை நடுநிசியில் இடம்பெற்றுள்ளது.
நடுநிசியில் ஆலய வளாகத்தினுள் புகுந்த யானை அங்கிருந்து களஞ்சியசாலையை தும்பிக்கையால் உடைத்துள்ளது. அங்கிருந்த கிடாரம் சட்டிபானை பீங்கான்கள் எல்லாம் சேதமடைந்துள்ளதுடன் கட்டிடம் பாவிக்க முடியாத அளவிற்கு வெடித்துள்ளது.
யானைகளால் வேளாண்மை அறுவடை முடிந்த பின்னர் அடிக்கடி இவ்வாறு சேதமேற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஆலய பரிபாலன சபை தலைவர் கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடகங்களுக்கு கூறுகையில்:
நடுநிசியில் யானைகள் புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளது. நான் அதிகாலையில் கனடா மதியண்ணருடன் இங்கு வந்து பார்த்தேன். இவை சேதமடைந்துள்ளது.பரிபாலன சபையை அழைத்துள்ளேன் பொலிஸில் முறைப்பாடு செய்ய. வயல்களுக்கு மத்தியில் இவ்வாலயம் இருப்பதால் ஆலயத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்.
தனவந்தர்கள் புத்திஜீவிகள் சேர்ந்துதான் இப்பாத்திரங்களெல்லாவற்றையும் தந்தார்கள்.அனைத்தும் நாசமாகியுள்ளன. வெள்ளிக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் இங்கு நிறைய அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அவற்றை பக்தர்களுக்காக சமைக்கவும் பகிரவும் இப்பாத்திரங்கள் பயன்பட்டன. அரசாங்கம் பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன் நஷ்ட ஈட்டையும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
29 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
4 hours ago