2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’’மீஸானின் மரகதங்கள் சீசன் த்ரி’’

R.Tharaniya   / 2025 ஜூன் 24 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கல்வியியலாளர்சேவைக்கான உள்வாங்க பட்டவர்களையும், கல்வியலாளர்களையும், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களையும்,பிபா சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். ஜப்ரான் அவர்களையும் பாராட்டி கௌரவிக்கும்.

அல்-மீஸான் பௌண்டஷனின் "மரகதங்கள் சீசன் த்ரீ" நிகழ்வுகள் அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப பேரவை பணிப்பாளருமானநூருல் ஹுதா உமர் தலைமையில் கல்முனை அல்- அஸ்ஹர் அரங்கில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் நட்சத்திர அதிதியாக மாற்றத்திற்கான சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்த்திட்டஆலோசகரும், அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின்ஆளுநர் சபை உறுப்பினருமான இப்திகார் றிசாத் ஷெரீப் அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் களான பி. ஜிஹானா ஆலீப், எம்.என்.ஏ. மலிக், எம்.எல்.எம். முத்தரிஸ், யூ.எல்.சாஜித், யூ.எல். றியால், அஸ்மா அப்துல் மலிக், ஏ. சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் விசேட அதிதிகளாக சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், பொறியியலாளர் கமால் நிஷாத், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விமான்கள்,கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பள்ளிவாசல்களின்நிர்வாகிகள், அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின்ஆளுநர் சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள்என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓய்வுபெற்ற அதிபர் யூ.எல். நஸார், கல்வியலாளர் சேவைக்கு கல்முனை பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட எம்.ஐ.எம். அஸ்மி, ஏ.ராஸீக், ஏ.சி.எம். மபாஸ், எம்.ஆர்.எம். நௌசாத், எம்.ஏ. அஸ்வர், ஏ.எம்.கே. முபாரக், சிஹானா ஏ கரீம், பிபா சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். ஜப்ரான் ஆகியோர் மாளிகைக்காடுபிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சிலர் கௌரவிக்கப்பட்டனர். 

நூருல் ஹுதா உமர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .