Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 30 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவன் தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பரிதாபகரமான முறையில் மரணமான சம்பவம் காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
காத்தான்குடி ஐந்தாம் குறிச்சியை மார்க்கட் வீதியில் வசிக்கும் ஜமால்தீன் முஹம்மது ரிஹாம் என்ற 16 வயது மாணவனே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார் .
தனது இல்லத்திற்கு முன்னால் உள்ள சிறிய வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென சறுக்கி கீழே விழுந்ததால் நெஞ்சு பகுதியில் பாரிய அளவிலான தாக்கத்துக்குள்ளாகி மேற்படி மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது .
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி பயிலும் குறித்த மாணவன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய முதல்வர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .