Janu / 2024 மே 09 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை - மெதிரிகிரிய வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (08) இடம்பெற்றுள்ளது .
கடந்த திங்கட்கிழமை அன்று மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ஒருவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளதுடன் அவரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (8) உயிரிழந்துள்ளார் .
ஓட்டமாவடி - பதுறியா நகரத்தை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான நஸீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்த நபருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம் ஒன்று காணப்படுவதாகவும் இந்த மரணம் விபத்தா அல்லது வேறு ஏதும் காரணமா ? என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்

26 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
19 Nov 2025