Janu / 2024 மார்ச் 03 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கொழும்பு வீதியில் ஞாயிற்றுக்கிழமை (3) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகந்தை - குடாப்பொக்கனை பகுதியிலிருந்து கணவன் , மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறாவூர் பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ் விபத்தில், குடாப்பொக்கனை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய அப்துல் ஹமீத் ஜெமீலா என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதுடன் , அபூபக்கர் முகம்மது இப்றாகீம் என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago