2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மோதித் தள்ளிய கார்:ஒருவர் காயம்

Editorial   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

ரீ.எல்.ஜவ்பர்கான்  

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் திங்கட்கிழமை ( 22) காலை விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்முனை சாலை  வழியே கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் கிரான்குளம் தர்மபுரம் சந்தியில் வைத்து வீதியை கடக்க முற்பட்ட காலை உணவு விற்பனை செய்பவரின் மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாந்திக்கு  காயம் ஏற்பட்ட நிலையம்  விற்பனைக்காக மோட்டார்சைக்கிளில் எடுத்துவரப்பட்ட காலை உணவுகள் அனைத்தும் வீதியில் சிதறிக் காணமுடிந்தது.

இது தொடர்பான மேலதிக விசாரண்களை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X