Janu / 2024 மே 15 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி பகுதில் வைத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு காத்தான்குடியை நோக்கி செவ்வாய்கிழமை (13) இரவு பிரயாணித்த லொறியில் இருந்த பொருட்கள் புதன்கிழமை (15) அதிகாலை 4.00 மணியளவில் நாவலடி பகுதியில் வைத்து திடீரென தீபற்றிக் கொண்டுள்ளது .
அதனையடுத்து ,லொறியை நிறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர் .
இதில் எடுத்துச் சென்ற பொருடகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கனகராசா சரவணன்

27 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
19 Nov 2025