2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வடகீழ் பருவமழைக்கு முன்னாயத்தம்

Freelancer   / 2021 நவம்பர் 21 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் வடகீழ் பருவகால பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், இன்று (21) தெரிவித்தார்.

மழை காலங்களில் ஏற்படக் கூடிய வெள்ள நீரை அகற்றுவது, அனர்த்த 
தயார்படுத்தல்களை செய்தல், கிராமிய மட்டத்தில் அனர்த்த குழுக்களை வலுப்படுத்தல், முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை விருத்தி செய்தல், சூறாவளி, டெங்கு அபாயம், கொரோவின் தாக்கம் இம்மூன்று விடயங்களையும் எதிர் கொள்ளக் கூடிய வகையில் சகல துறை சார் திணைக்களங்களுடாக தயார் செய்து நடைமுறைப் படுத்தப்படல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை விஸ்தரித்தல், அனர்த்த நிலமையின் போது அவசர தேவைகளுக்கான பொருட்களை சேமித்து வைத்தல், முக்கியமான உபகரணங்களை கைவசம் வைத்திருத்தல்.

24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், சகல திணைக்களங்களில் அவசர கால செயற்பாடுகளை கையாள்கின்ற கட்டுப்பாட்டு அறையை விஸ்தரித்தல்.

03 பிரதேச செயலகங்களிலும் வெள்ள அனர்த்தங்களை தடுக்கும் பொருட்டு துரிதமாக பொது மக்கள், சுகாதார திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்றவை ஒன்றிணைந்து இச் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக சிரமதானம், சிறு குளங்களை புனரமைத்தல், அணைக்கட்டுகளை சீர்செய்தல் போன்ற வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 04 இலட்சம் ரூபாய் நிதி ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .