Janu / 2024 ஜனவரி 02 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தினுடைய குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் காணி வெளிக்களப் போதனாசிரியர்களின் 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியலை கிழக்கு மாகாண காணி நிருவாகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டிற்கான வருடாந்த இடமாற்றமானது 2024.03.01 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் இந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடுகளை 2024.01.15 ஆம் திகதிக்கு முன்னர் உரிய உத்தியோகத்தர்கள் தமது திணைக்களத்தின் www.eplandinfo.lk எனும் இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமெனவும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.எம்.ஆர்.சீ.தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இடமாற்றம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் இடமாற்றம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களை உரிய சேவை நிலையத்திற்கு உரிய நேரத்திற்கு விடுவித்து அவர்கள் கடமையை பொறுப்பேற்பதற்கு வசதியாக ஒத்துழைப்பு நல்கவேண்டுமெனவும் பிரதேச செயலாளர்களை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் மேலும் கேட்டுள்ளார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago