Editorial / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி மடுவில் நீர் நிலையில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (26) மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு, காந்திநகர் சின்ன சிப்பிமடுவைச் சேர்ந்த 51 வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்
குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை (23) காலையில் வீட்டில் இருந்து வெளியேறிச் சென்றவர் வீடு திரும்பாததை அடுத்து அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் நீர் நிலையில் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று சடலத்தை பார்வையிட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago