R.Tharaniya / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டு.வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை செவ்வாய்க்கிழமை (14) அன்று நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையின் வெடிக்கவைத்து அழித்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வயலில் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை வேளாண்மை நடவடிக்கைக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திர மூலம் நிலத்தை பண்படுத்தும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இதையடுத்து பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவு வரவழைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள் , ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கான் ஒன்றில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் வைத்து வெடிக்க வைத்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த காலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனகராசா சரவணன்

9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago