Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 10 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி காலமானார் .
கடந்த திங்கட்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது தம்பட்டை பிரதேசத்தில் வொலரோ ரக கென்றர் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் .
பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (09) காலமானார்
தம்பிலுவில்லை சேர்ந்த சட்டத்தரணியும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சசிராஜ், இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியாக வெளியேறினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தடவையியல் மருத்து துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார் . கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் முன்னணி உறுப்பினர் ஆவார்.
மேலும் தனது சொந்த நிதியில் பல்வேறு சமூக சேவைகளும் செய்துவந்துள்ளார். பாண்டிருப்பில் மேட்டு வட்டை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நுளம்பு வலைகளை சொந்த செலவில் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை நகர லயன்ஸ் கழக தலைவர் லயன் கணபதிப்பிள்ளை இதயராஜா தலைமையிலான குழுவினர் அன்னாரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago