2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

விழிப்புணர்வு கலந்துரையாடல்

Janu   / 2024 மார்ச் 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக நிரந்தர தீர்வுகள் இன்றி காணப்படும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் கற்பிட்டி பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் புதன்கிழமை  (06) இடம்பெற்றுள்ளது .

இந் நிகழ்வில் கழிவு முகாமைத்துவம் பற்றிய முழுமையான விளக்கம் வடமேல் மாகாண கழிவு முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஏ. மாரசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதுடன்  "பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீ இட்டு எரிப்பதில் இருந்து விளகி மீள் சுழற்சி முறையினை நடைமுறைப்படுத்தல்" என்ற கருத்து இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது .

மேற்படி கலந்துரையாடலில் கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், மத ஸ்தானங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், மீனவ சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்கள், கல்விப்  பணிமனையின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X