2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

வீடொன்றில் திடீர் தீ பரவல்

Janu   / 2025 நவம்பர் 30 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பகுதியில் உள்ள வீடொன்றில் சனிக்கிழமை (29)  இரவு திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.   

காத்தான்குடி ஆறாம் குறிச்சி ரஹ்மா பள்ளிவாசல் பகுதியிலுள்ள நசீர் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மெழுகு வத்தியை பத்த வைத்து விட்டு, வீட்டு உரிமையாளர்கள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் மெழுகுவர்த்தி உருகி கதிரையில் தீ பரவல் ஏற்பட்டு பின்னர் வீட்டில் தீ பரவியுள்ளது.

பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் வீட்டின் உள் பகுதியின் சில இடங்கள் எரிந்துள்ளது.

எம் எஸ் எம் நூர்தீன் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .