Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு சிகரெட்டுகளை சூட்சுமமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி வந்த, கல்முனை கடற்கரை பள்ளி வீதி ஆட்டோ பசார் சந்தியை மற்றும் மருதமுனை ஹாஜியார் வீதியை சேர்ந்த 58,72 வயதுடைய இருவர் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிக்கமைய மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைன் போது அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பயனித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து சோதனையிட்டுள்ளதுடன்
அதிலிருந்து சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது .
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் கல்முனை பகுதியில் உள்ள பாதணிகள் விற்பனை கடை ஒன்றுக்கு கொண்டு செல்ல முயன்றதாக தெரியவந்துள்ளது .
மேலும், கைதான சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுவருகினறனர் .
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .