R.Tharaniya / 2025 நவம்பர் 23 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சுமை தாங்கி பாலம் மற்றும் வவுணதீவு வலையிறவு பாலம் ஆகியவற்றினை ஊடறுத்து வெள்ள நீர் பரவி செல்வதால் குறித்த பகுதிகள் ஊடான போக்குவரத்து செய்வதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன்வைத்த அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடலில் முகத்துவாரம் அகழ்வதற்கான அனுமதியை கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய முகத்துவாரம் வெட்டப்பட்டு தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




எம் எஸ் எம் நூர்தீன்
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago