2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

`வைக்கோலை எரிக்க வேண்டாம்`

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் அறுவடையின் பின்னர் நெற்செய்கை காணிகளில் காணப்படும் வைக்கோலை எரிக்க வேண்டாமென, அம்மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் நேற்று (16) தெரிவித்தார்.

பெரும்பாலான வயல்வெளிகளில் அறுவடையின் பின்னர் மீதமாய் கிடைக்கக் கூடிய
வைக்கோலை எரிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் மற்றும் வைக்கோலை நிலத்தில் இடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பாக விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

எனினும்இதனை மீறி மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் வைக்கோலை எரிப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வைக்கோலை எரிக்காமல் வயலில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து மண்ணுடன் கலந்து சேதனப் பசளையாகப் பயன்படுத்தினால் கூடுதலான விளைச்சலைப் பெற முடிவதோடு, மண்ணின் இரசாயன, பௌதிக ,உயிரியல் தன்மைகள் என்பன விருத்தியடைய வழிவகும் என்று
அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .