2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஹபரன வீதியில் விபத்து

Nirosh   / 2021 மார்ச் 27 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)

திருகோணமலை ஹபரன பிரதான வீதியில் இன்று (27) கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனங்களில் சென்ற மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளாகி பாலமொன்றினுள் விழுந்துள்ளதோடு, இதில் பயணம் செய்த லொறியின் சாரதியொருவருக்கும், கொள்கலனில் பயணித்த சாரதிக்கும் அதன் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் ஹபரன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து ரத்மலான பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலனும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .