Janu / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஐஸ் வாடி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை ஞாயிற்றுக்கிழமை(7) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கல்முனை பகுதியைச் சேர்ந்த, 1 பிள்ளைகளின் தந்தையான 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 740 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள்யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago