Janu / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை செவ்வாய்க்கிழமை (05) இரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.ஸ்ரீ
இதன்போது சந்தேக நபரான பெண்ணிடம் இருந்து 2 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago