Kogilavani / 2011 ஜூலை 13 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பிரிட்டனைச் சேர்ந்த நபரொருவர் 'யூரோ மில்லியன் லொத்தர்' சீட்டிழுப்பில் 185 மில்லியன் யூரோக்களை (சுமார் 2829 கோடி இலங்கை ரூபா) வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிரிட்டனைச் சேர்ந்த மற்றொரு நபர், 129 மில்லியன் யூரோக்களை வென்றமையே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
யூரோ மில்லியன் லொத்தர் கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லொத்தர் விளையாட்டானது மேற்கு ஐரோப்பியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து, லக்ஸம்பேர்க், போர்த்துகல், ஸ்பெய்ன் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய 9 நாடுகளில் விளையாடப்பட்டு வருகின்றது.
பிரிட்டனின் லொத்தர் சபை பேச்சாளர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இது உண்மையில் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். பிரிட்டனைச் சேர்ந்தவர் அந்த லொத்தர் பரிசு முழுவதையும் வென்றமை குறித்து நாங்கள் முழு மகிழ்ச்சியடைந்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
41 minute ago
45 minute ago
54 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
54 minute ago
13 Mar 2026