2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

128,097 அடி உயரத்திலிருந்து குதித்து ஒஸ்ட்ரிய பிரஜை சாதனை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒஸ்ட்ரியா நாட்டுப் பிரஜையான பீலிக்ஸ் பம்கட்னர் (43 வயது), அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ வான்பரப்பின் சுமார் 128,097 அடி உயரத்திலிருந்து (39 கிலோமீற்றர்) குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஒலி வேகத்தை விட அதிகமான வேகத்தில் சுமார் 10 நிமிடங்களுக்குள் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 128,097 அடி உயரத்திலிருந்து குதித்துள்ள பீளிக்ஸ், குதித்து சுமார் 4 நிமிடங்கள் 9 செக்கன்களின் பின்னர் பரசூட்டினை விரியச் செய்துள்ளார்.

1960ஆம் ஆண்டில் ஜோ கிட்ன்கர் என்ற விமானி, சுமார் 102,800 அடி (19 கிலோமீற்றர்) உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை பீலிக்ஸ் இன்று முறியடித்துள்ளார்.

வானிலிருந்து குதிக்கும் போது மனித உடலுக்கு ஏற்படும் விளைவுகள், இவ்வாறு குதிக்கும் போது பயன்படுத்தப்படும் பலூன் மற்றும் பரசூட் ஆகியவற்றின் சக்தி இதன்போது அளவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஒலியின் வேகத்தை தோற்கடித்த முதல் மனிதர் என்ற பெருமையை பீலிக்ஸ் அடைந்துள்ளார். அவர் மணித்தியாலத்துக்கு 1342 கிலோமீற்றர் வேகத்தில் பூமியை வந்தடைந்துள்ளார்.

'நான் பூமியை நோக்கி வரும் போது எனது முதுகில் சுமார் 20 தொன் நிறைகொண்ட பொருளொன்றை சுமந்து வந்ததைப்போன்று உணர்ந்தேன். இந்த சாதனைக்காக நான் ஏழு வருடங்களாக பயிற்சியில் ஈடுபட்டேன்' என்று பீளிக்ஸ் தெரிவித்துள்ளார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .