Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் உள்ள பூனையொன்று உலகிலேயே மிக நீளமான வளர்ப்பு பூனையென்ற புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.
ஸ்டீவி எனும் 5 வயதுடைய இந்தப் பூனை அண்மையில் அளவிடப்பட்டபோது அதனது மூக்கு முதல் வால் வரையிலான நீளம் 48.5 அங்குலமாக இருந்தது. அதையடுத்து அப்பூனை உலக சாதனை பூனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நவேடா மாநிலத்தின் ரெனோ நகரைச் சேர்ந்த அப்பூனையின் உரிமையாளர்களான ரொபின் ஹென்ரிக்ஸன் மற்றும் எரிக் பிரேன்ஸ்னெஸ் குறிப்பிடுகையில், 'இப்பூனையை பார்த்தவர்கள் அந்த பூனையின் நீளத்தைப் பார்த்து திகைத்ததுடன், அதனை உலக சாதனை வெளியீட்டாளர்களுக்கு அறிவித்தால் நிச்சயம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்று கூறினார்கள். அதன்பின் நாங்கள் உலக சாதனை வெளியீட்டாளர்களுக்கு அறிவிப்பது என்று தீர்மானித்தோம்.
ஸ்டீவ் மூன்று வருடத்திற்கு முன்பே அபூர்வமான முறையில் நீளமாக இருந்ததை நாங்கள் அவதானித்தோம்' என்று கூறியுள்ளனர்.
ஸ்டீவ்வுக்கு முன்னர் உலக சாதனைக்குரியதாக விளங்கிய பூனை 48 அங்குல நீளமானதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Apr 2025
30 Apr 2025