Kogilavani / 2011 ஜனவரி 31 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலகின் மிகப் பெரிய கோன் ஐஸ்கிறீமானது இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐஸ்கிறீமை உருவாக்குவதற்கு 160 இறாத்தல் சொக்லட் மற்றும் 2,000 வேபர்ஸ் பிஸ்கட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாலியைச் சேர்ந்த ஐஸ் கிறீம் வல்லுனர்கள் 7 பேர் இணைந்து 30 மணித்தியாலங்களை செலவிட்டு இம் மிகப்பெரிய ஐஸ்கிறீமை உருவாக்கியுள்ளனர்.
10 அடி உயரமான இந்த ஐஸ் கிறீம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் ரிமினி நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்போது இந்த ஐஸ்கிறீமானது உலகில் மிகப்பெரிய கோன் ஐஸ்கிரீம் என்று கின்னஸ் உலக சாதனை வெளியீட்டாளர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
' இது பார்ப்பதற்குத் தோன்றுவதைவிட மிகவும் கடினமானது. ஏனெனில் ஐஸ் கிறீம் உருகிவிடாமல் இருப்பதற்காக மிகவும் உறைபனி சூழ்நிலையில் பணியாற்ற வேண்டும்' என இதனை உருவாக்கிய குழுவின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
12 minute ago
3 hours ago
6 hours ago
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
6 hours ago
02 Nov 2025