Kogilavani / 2012 ஜனவரி 19 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலகின் மிகப்பெரிய வீடியோ கேம் கட்டுப்பாட்டுக் கருவி இன்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய வீடியோ கேம் கட்டுப்படுத்தியென கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முற்றும் முழுதாக இயங்கும் நிலையிலுள்ள இச்சாதனம் லண்டனில் உள்ள லிவர் பூல் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இவ்வீடியோ கேம் கட்டுப்படுத்தி கருவியானது 12அடி x 5அடி 3அடி x 1அடி 8 அங்குல அளவுடையது. 265 இறாத்தல் எடைகொண்ட இக்கருவியை செய்வதற்கு 5 மாதங்கள் தேவைப்பட்டன. சுமார் 4,000 ஸ்ரேலிங் பவுன்கள் இதற்கு செலவாகியுள்ளன.
நெதர்லாந்து டெல்ப்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று இவ்வீடியோ கேம் கட்டுப்படுத்திக் கருவியை உருவாக்கியுள்ளது.
.jpg)
.jpg)
34 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
1 hours ago