2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

உலகின் அதிக வயதான தொழிற்சார் டென்னிஸ் வீரர்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


டென்னிஸ் விளையாட்டை தொழில்முறையாக மேற்கொண்டு வரும் 95 வயதுடைய வயோதிபர் ஒருவர், உலகில் தரப்படுத்தப்பட்ட அதிக வயதான டென்னிஸ் வீரராக விளங்குகிறார்.

ஆர்மீனியாவை பிறப்பிடமாகக் கொண்ட, ஆர்ஜென்டீன பிரஜையான ஆர்ட்டின் எல்மியனே இவ்வாறு அதிக வயதுடைய டென்னிஸ்
விளையாட்டு வீரரென தரப்படுத்தப்பட்டுள்ளார். டென்னிஸ் விளையாட்டை தனது மூச்சாகவும் வாழ்வாகவும் இவர் கருதுகிறார்.

வாரத்தில் 3 முறை டென்னிஸ் விளையாட்டை விளையாடும் இவர், தனது உடலுக்கு உறுதியையும் ஆரோக்கியத்தையும் டென்னிஸ் விளையாட்டு தருவதாக கூறுகிறார்.

சர்வதேச தொழிற்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தரப்படுத்தலில் 39 பேர் உள்ளனர். ஆனால், எல்மியன் மாத்திரமே 1920 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

'இவர்களில் 90 வயதானவர்கள் யாரும் இல்லை. எனவே 85 வயதானவர்களுடன் நாள் விளையாட வேண்டியுள்ளது' என மேற்படி வயோதிபர் தெரிவித்துள்ளார்.

'நான் முறையாக விளையாடுவேன். சில நேரங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளேன். கடந்த வருடம் இரு தடவைகள் இரண்டாவது இடத்தை வென்றுள்ளேன். இது போட்டியாளரிலும் என்னிலும் தங்கியுள்ளது' என எல்மியன் கூறுகிறார். அவர் கடந்த 1938 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவுக்கு இடம்பெயர்ந்தார்.

'எனது உடலும் பாதங்களும் விளையாடுவதற்கு அனுமதித்ததால், நான் இனியும் அமர்ந்திருக்கப் போவதில்லை. டென்னிஸானது ஒட்சிசனை சுவாசிக்க செய்கிறது. உடலை கட்டமைப்புடன் வைத்திருக்கிறது. தொப்பை ஏற்படுவதை தடுக்கிறது. அல்லது உடலை மெலியச் செய்கிறது. கொலஸ்ட்ரோல் பிரச்சினை முதல் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுவிக்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .