2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

உலகில் மிகவும் உயரம் குறைந்த கார்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 45.2 சென்றிமீற்றர் உயரமுடைய ஒரு காரானது உலகில் வீதி பாவனைக்கு ஏற்ற மிக உயரம் குறைந்த கார் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தரையிலிருந்து காரின் அதிகூடிய உயரம் நன்கு அளவிடப்பட்டதை தொடர்ந்து இக்கார் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் மிக உயரம் குறைந்த காராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இக்காரை ஜப்பானின் அஸாகுச்சியில் உள்ள ஒயொதோ சன்யோ உயர்தர பாடசாலையில் வாகனப் பொறியில் கற்கை நெறியை பயின்றுவரும் மாணவரொருவர் வடிவமைத்துள்ளார். 

விளையாட்டுக் காரை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இக்காரானது வேகம் மற்றம் மேடு பள்ளங்களில் செலுத்துவதில் குறைப்பாடுடன் காணப்பட்டாலும்  சட்டரீதியாக, ஜப்பானிய வீதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிராய் (எதிர்காலம்) என பெயரிடப்பட்ட இக்கார், ஜப்பானின் சி.கியு.10 மோட்டார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆறு பெட்டரிகளுடன் உதவியுடன் இயங்குகின்றனது.

காரின் உடலமைப்பு, ஸ்டீரிங் அமைப்பு, விளக்குகள், இருக்கைகள் மற்றும் ஏனைய பாகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வாகனமானது, பிரிட்டனை சேர்ந்த பெரி வெட்கின் என்பவரால் கடந்த 2009 ஆம் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த காரின் சாதனையை முறிடியத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • N.kavaskar Friday, 05 October 2012 12:58 PM

    வரவேட்குரம். இன்னும் பல விதமான புதிய சாதனைகள் தேவ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .