2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மூக்கில் சாதனை

Gavitha   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வதே எமது வழமை.

அவ்வாறிருக்கையில், இளைஞரொருவர் கணினியின் விசைப்பலகையில் அவரது மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை படைத்ததுள்ளார்.

இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ஷித் ஹூசைன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறான தொருசாதனையை நிலைநாட்டியுள்ளார்.

10 விரலைவைத்தே டைப் செய்ய சிரமப்படும் பலரின் மத்தியில், அவரது மூக்கை பயன்படுத்தியது மாத்திரமல்லாது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு இவர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் 47.44 செக்கன்களில், 103 எழுத்துக்களை மூக்கின் மூலம் டைப் செய்துள்ளார். இதன்போது, இவரது கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டியுள்ளார்.

இவ்வாறான சாதனையை படைப்பதற்காக மூன்று வருடகாலத்தை இவர் செலவுசெய்துள்ளார். தனக்கு நிகராக எந்த போட்டியாளரும் வந்துவிடக்கூடாது என்ற இலக்கை கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் 6 மணித்தியாளங்கள் இவ்வாறு மூக்கை பயன்படுத்தி டைப் செய்து பழகுவாராம்.

'நீங்கள் சாதனையாளராக அனைவரின் மனதிலும் இடம்பிடிக்க வேண்டுமாயின், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதையும் கணக்கிடவேண்டும்' என்று அவ்விளைளஞன் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X