2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

30 லட்சம் டொலர் பெறுமதியான உலகின் மிகப்பெரிய தங்க மோதிரம்

Kogilavani   / 2011 மே 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய தங்க மோதிரத்தின் பெறுமதி 30 லட்சம் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

63.856 கிலோகிராம் எடையுள்ள இந்த மோதிரம் 21 தங்கத்தினாலானது என  அதனது உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இம்மோதிரமானது உலகின் மிகப்பெரிய தங்க மோதிரமென கின்னஸ் உலக சாதனை பதிவாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான சான்றிழ்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த நகை தயாரிப்பு நிறுவனமான தைபாவினால் உலக தங்கப் பேரவையின் ஆதரவுடன் 2000 ஆம் ஆண்டு இந்த மோதிரம் உருவாக்கப்பட்டது.

அப்போது அதற்கு 547,000 அமெரிக்க டொலர்கள் செலவாகியது. அதன்பின் கடந்த பல வருடங்களாக அந்த மோதிரத்தின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளதென அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'இந்த மோதிரம் செய்யப்பட்டபோது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 250 அமெரிக்க டொலர்களாக இருந்தது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1500 டொலர்களாக உள்ளது. எனவே இந்த மோதிரம் அதன் உரிமையாளருக்கு எந்தளவு லாபத்தை வழங்கியுள்ளதென கணிப்பிட்டுக்கொள்ளலாம் என 'கான்ஸ் ஜுவலர்ஸ்' நிர்வாக முகாமையாளர் அனில் தாங்க் கூறுகிறார்.


  Comments - 0

  • isha Sunday, 22 May 2011 05:37 AM

    ஷப்பா***************

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .