2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

3D ஓவியத்தில் உலக சாதனை

Kogilavani   / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகிலே மிகப் பெரிய முப்பரிமாண (3D)  ஓவியத்தை வரைந்த சீனாவைச் சேர்ந்த குய் ஸியாங்குவா என்ற  ஓவியர் மற்றொரு  முப்பரிமாண ஓவியத்தையும் வரைந்துள்ளார்.

100 மீற்றர் சதுரப்பரப்பளவை கொண்ட ஓவியமொன்றை ஷாங்காய் நகரில் ஒரின்டல் குய் ஸியாங்குவா வரைந்துள்ளார். இந்த ஓவியம் எதிர்வரும் மே மாதம் வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இவர் ஏற்கெனவே சீனாவின் குவாங்ஸோ மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 892 மீற்றர் சதுர பரப்பளவைக் கொண்ட முப்பரிமாண ஓவியமொன்றை வரைந்திருந்தார்.

இது உலகில் மிகப் பெரிய முப்பரிமாண ஓவியமென கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X