2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

74 வயதான 'சிக்ஸ் பெக்' அழகி

Kogilavani   / 2011 மே 30 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

74 வயதுடைய மூதாட்டியொருவர், உடற்கட்டழகு போட்டியில் பங்குபற்றிய உலகின் மிக அதிக வயதான பெண் என கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

பால்டிமோரைச் சேர்ந்த ஏர்ஸ்டைன் செபர்ட் என்ற இப்பெண், 'வயது என்பது வெறும் இலக்கம் தவிர  வேறில்லை' என்று கூறுகிறார்.

'சிக்ஸ் பெக்' உடலமைப்புடன் காணப்படும் ஏர்ன்ஸ்டைனிடமிருந்து ஆண்களை விலகியிருக்கச் செய்வதற்கு தான் சிரமப்படுவதாக ஏர்ஸ்டைனின் கணவரான கொலின் செபர்ட் (வயது 54) தெரிவித்துள்ளார்.

மொடலிங் தொழில் புரியும் ஏர்ன்ஸ்டைன் உடற்பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். 'எவரையேனும் ஊக்குவிக்க முயற்சித்தால் நீங்கள் அதன்படி வாழ வேண்டும். நீங்கள் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு என்னால் பயிற்சிகளிக்க முடியும்' என அவர் கூறுகிறார்.

1995 ஆம் ஆண்டு உடற் பான் அமெரிக்கன் விளையாட்டு விழாவில் உடற் கட்டழகுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகுராணியான  57 வயதுடைய யொஹ்னி சாம்போர்கருக்கும் அவர் கடும் பயற்சியளித்து வருகிறார்.

அவர் தினமும், அதிகாலை 3 மணிக்கு எழுந்து தியானத்தில் ஈடுபடுகிறார். அதன் பிறகு காலை உணவிற்கு முன்பாக 10 மைல் தூரம் நடக்கிறார். மேலும்,  சிவப்பரிசி சோறு,  கோழி இறைச்சி,  மரக்கறிகள், முட்டை வெள்ளைக்கரு என்பவற்றை தினமும் 3 தடவைகள் உட்கொள்கின்றார்.

'சிக்ஸ் பெக்' தான்  ஏர்ன்ஸ்டைனின் 'கையெழுத்து' என்கிறார் அவரின் கணவர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .