Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில், யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை, வெறும் 12 மணிநேரத்தில் சுற்றிப்பார்த்த டுபாயைச் சேர்ந்த அப்பா - மகன் ஜோடி, கின்னஸில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த முகமது தாகிர் என்பவரும் அவரது மகன் முகமது ஆயான்னும், டுபாயில் வாழ்ந்து வருகின்றனர். முகமது தாகிர், அவரது மகன் முகமது ஆயானுடன், இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகசப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டனர். இவர்களைப் போலவே அந்த போட்டியில் மேலும் 22 பேர் கலந்துகொண்டனர்.
அந்தப் போட்டியின்படி, இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை, குறைந்த நேரத்தில் சுற்றிப்பார்த்து விட்டு வரவேண்டும். இதில், அனைத்து இடங்களையும் சுமார் 11 மணி நேரமும் 33 நிமிடங்களில் சுற்றிப் பார்த்து சாதனை படைத்துள்ளனர் அந்த தந்தையும் மகனும்.
இதில் மிகவும் அதிசயமான ஒரு விடயம் என்னவென்றால், இந்தப் பயணத்தை மேற்கொள்ள, முற்றிலும் பொதுத்துறை வாகனங்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, ஓட்டோ ரிக்ஷா, டெக்ஸி, அரசு பஸ் மற்றும் ரயில்களில் பயணித்தே, இந்தியாவிலுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், சுமார் 300கிலோமீற்றர் தூரத்தை, இவ்வளவு குறைந்த நேரத்தில் சுற்றியுள்ளனர்.
இந்தப் பயணத்தில் அவர்கள், தாஜ்மஹால் தொடங்கி, ஆக்ரா கோட்டை, உத்தரப் பிரதேசத்திலுள்ள ஃபதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசியப் பூங்கா, டெல்லியில் உள்ள முகலாய அரசர் உமாயுனின் கல்லறை, செங்கோட்டை, குதூப்மினார் உள்ளிட்ட இடங்களை அவர்கள் சுற்றிவந்துள்ளனர்.
இதற்குமுன் நடந்தப் போட்டியில், இதேபோல் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட கின்னஸ் சாதனையை, இவர்களின் சாதனை முறியடித்துள்ளது. இது தொடர்பாக, டுபாய் பத்திரிக்கை ஒன்றுக்குப் பேட்டியளித்த தந்தை முகமது தாகிர், இந்த முழுப் பயணத்திலும், பஸ்ஸுக்காகவும் ரயிலுக்காகவும் காத்திருந்த சமயங்களில் மட்டுமே ஓய்வெடுத்ததாகவும் அந்த நேரத்திலேயே, தங்களது சாப்பாட்டை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
20 minute ago
27 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
47 minute ago
1 hours ago