2025 ஜூலை 30, புதன்கிழமை

எவரெஸ்ட் சிகரத்தை 2 வாரத்தில் மூன்று முறை ஏறி சாதனை

Editorial   / 2024 மே 26 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு வாரத்தில் 3 முறை ஏறி நேபாள மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளரான பூர்ணிமா ஷ்ரேஸ்தா சாதனை படைத்துள்ளார்.

பூர்ணிமா முதலில் மே 12 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் 8848.86 மீற்றர் உச்சத்தை அடைந்தார். மீண்டும் அவர் மே 19 அன்று பசாங் ஷெர்பாவுடன் இணைந்து உச்சியை அடைந்தார்.

அடுத்ததாக நேற்று 3ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும். 2018ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறியுள்ளார்.

மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .