2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரோபோ பல் சிகிச்சை செய்து சாதனை

Editorial   / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோபோக்கள் பல்வேறு வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வைத்திய துறையிலும் சேவை செய்வதற்காக ரோபோ ஒன்றினை சீனா படைத்துள்ளது.

சீனா,ஸியான் நகரில் உள்ள இராணுவ மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலை, பெய்ஜிங்கில் செயற்படும் பெய்காங் பல்கலைக்கழகத்தின் ‘ரோபோ’ நிறுவனம் இணைந்து பல் மருத்துவ ரோபோவை உருவாக்கியுள்ளது

இந்த ‘ரோபோ’ ஷான்ஸி மாகாணத்தின் ‘ஸியான்’ நகர வைத்தியசாலையில் , ஒரு பெண்ணுக்கு 2 செயற்கை பற்களை பொருத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளது. இதன்போது, வைத்தியர்களும் உடன் இருந்துள்ளனர்.

இதன்போது சிறு தவறுகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்,அறுவை சிகிச்சைக்கு முன்பு பல் வைத்தியர்கள் நோயாளிக்குரிய கருவிகளை பொருத்தினர், அறுவை சிகிச்சைக்குரிய திட்ட செயல்பாடுகள் ரோபோவில் பதிவு செய்யப்பட்டது.

இதன் பின்னரே அறுவை சிகிச்சை செய்து, புதிய பற்களை பொருத்தி, உலகத்தில் பல் அறுவை சிகிச்சை செய்த முதல் ​​​​ரோபோ என்ற சாதனையை பெற்றுள்ளது.

சீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றாற்போல் வைத்தியர்கள் இல்லாதமையால், ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .