Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 13 , பி.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகா கும்பமேளா என்பது இந்தியாவில் நடைபெறும் மிக பிரம்மாண்ட விழாக்களில் முதன்மையானதாகும். கும்பமேளா பற்றி பலருக்கும் முழு விபரங்கள் தெரியாமல் இருக்கும். இந்த விழா எதற்காக நடத்தப்படுகிறது என்பது கூட பலருக்கும் தெரியாது. இதன் சிறப்பு தெரியாதவர்களுக்கு இந்த கட்டுரை உதவியாக இருக்கும்.
மகா கும்பமேளா அன்று என்ன செய்ய வேண்டும்? மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் என்ன செய்யலாம்? அப்படி மகா கும்பளேமாவில் கலந்து கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்ற தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலகின் மிகப் பெரிய விழாவாகவும், அதிகமான மக்கள் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ள விழா இந்தியாவின் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான். சன்னியாசிகள், துறவிகள், சாமானிய மக்கள். ஆண்கள், பெண்கள், வேத பண்டிதர்கள் என கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக கும்பமேளா கருதப்படுகிறது. கும்பமேளா திருவிழா ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் தான் நடத்தப்படும். இருந்தாலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா தான் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.
கும்பமேளா வகைகள்
மொத்தம் நான்கு வகையான கும்பமேளாக்கள் உள்ளன. அதாவது ஆர்த் கும்மேளா, பூர்ண கும்பமேளா, மக் கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் வித்தியாசம் உள்ளது.
* ஆர்த் கும்பமேளா - 6 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. இது ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜில் நடத்தப்படும்.
* பூர்ண கும்பமேளா - இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்வார், பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைனி ஆகிய நான்கு இடங்களிலும் நடத்தப்படும்.
* மக் கும்பமேளா - இது ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும். இதை சேட்டா கும்பமேளா என்றும் சொல்லுவதுண்டு.
* மகா கும்பமேளா - இது தான் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது. 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு பிறகு நடத்தப்படும். இது பிரயாக்ராஜில் மட்டுமே நடத்தப்படும்.
கும்பமேளா தோன்றிய வரலாறு
அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது பல்வேறு தெய்வீக தன்மை கொண்ட பொருட்களைத் தொடர்ந்து அமிர்தம் கிடைத்தது. அது அசுரர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கலசத்தை (கும்பம்) எடுத்துச் சென்றார். அப்போது அமிர்தத்தின் சில துளிகள் பூமியில் சிந்தி, அவைகள் ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, காசி ஆகிய நான்கு புனித நகரங்கள் தோன்றிய. இதன் நினைவாக கொண்டாடப்படுவதே கும்மேளா ஆகும். கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிக மிக சிறப்பானதாகும்.
மகா கும்பமேளா 2025 திகதி
மகர சங்கராந்தி துவங்கி, மகா சிவராத்திரி வரையிலான 44 நாட்கள் இந்த மகா கும்பமேளா நடத்தப்படும். நவகிரகங்களில் சில குறிப்பிட்ட சுப கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒரே நாளில் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளிலேயே இந்த மகா கும்பமேளா நடத்தப்படும். அப்படி ஒரு அற்புதமான நாள் இந்த ஆண்டு வர உள்ளது. ஜனவரி 13ம் திகதி துவங்கி, பிப்ரவரி 26ம் திகதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவின் போது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கும். மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகா கும்பமேளா 2025 நிகழ்வுகள்
மகா கும்பமேளாவின் போது பலவிதமான சடங்குகள் நடத்தப்படும். யானைகள், குதுிரைகள், ரதங்கள், மின்னும் வாள்கள் ஆகியவற்றிற்கு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். ஜனவரி 13ம் தேதி பெளர்ணமி ஸ்நானத்துடன் துவங்கும் மகா கும்பமேளாவில் ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29ல் அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரரவரி 12ல் மகி பெளர்ணமி ஸ்நானம், பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரி ஸ்நானம் ஆகியவற்றுடன் மகா கும்பமேளா இந்த ஆண்டு நிறைவடைய உள்ளது.
முடியாதவர்கள் செய்ய வேண்டியவை
இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் 35 முதல் 40 கோடி வரையிலான மக்கள் கலந்து கொள்வார்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அகோரிகளும், சாதுக்களும், துறவிகளும் பிரயாக்ராஜில் குவிய துவங்கி விட்டனர். கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், உணவு கடைகள் என கோலாகலமாக நடைபெற உள்ள மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு கோடிக்கணக்கானவர்கள் புனித நீராட உள்ளனர். இதனால் பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு நாமும் புனித நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரயாக்ராஜ் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள புனித நதிகள், திரிவேணி சங்கமங்களில் புனித நீராடி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பலனை பெறலாம்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடுவது ஏன்?
தேவர்களின் காலத்தை பொருத்தவரை ஒருநாள் என்பது பூலோகத்திற்கு ஒரு ஆண்டு என்பதாகும் .புராண கதையின்படி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் 12 நாட்கள் யுத்தம் நடந்தது அதன் பன்னிரண்டாவது நாள் முடிவில் தான் அமிர்த கலசம் தேவர்களுக்கு கிடைத்தது. அப்பொழுது அந்தக் கலசத்தில் இருந்து நான்கு துளிகள் விழுகின்றன. அந்த இடங்கள்தான் பிரயாக்ராஜ் ,ஹரித்துவார், உசைன், நாசிக் ஆகும். இதனை கொண்டாடும் விதமாகத்தான் கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஏழாம் நூற்றாண்டில் யுவான்சுவாங் இந்தியா வந்தபோதுபிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்டதாக தனது பயண குறிப்பில் எழுதியுள்ளார் .ஆகவே இது மிகவும் பழமை வாய்ந்த கொண்டாட்டமாகவும் உள்ளது. இந்த பிரபஞ்சத்திலேயே மாபெரும் சங்கமம் என்றால் இந்த மகா கும்பமேளா தான். இவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஆன்மீக திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு அதன் புனித பலனை பெறுவோம்.
நவீன தொழில்நுட்பம்
நீருக்கடியில் செயல்படும் 113 ட்ரோன்கள், 2,700 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் உட்பட நவீன தொழில்நுட்பங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநில பொஸாருடன் தேசிய பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி), தீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி 14 (மகர சங்கராந்தி), 29 (மவுனி அமாவாசை) மற்றும் பெப்ரவரி 3 (வசந்த பஞ்சமி) ஆகிய 3 தினங்கள் புனித நீராடலுக்கான சிறப்பு தினங்கள் ஆகும். இந்த நாட்களில் கூட்டும் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (நன்றி: இணையம்)
25 minute ago
35 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
35 minute ago
38 minute ago