2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

161 ஆவது பொலிஸ் வீரர்கள் நினைவுத் தினம்

Editorial   / 2025 மார்ச் 21 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிசின் 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் 2025.03.21 ஆந் திகதியாகும். இன்றைய தினத்தில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த பொலிஸ் வீரர்களை ஒவ்வொரு வருடமும் நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.

நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ள சாதகம் மற்றும் பாதகமான சம்பவங்கள்தொடர்பான புரிதல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். வீரர் என்பவர் சமூகத்தில் பாரபட்சத்துடன் அசாதாரணமான முறைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தின் போது  பலரது உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக தானாக முன்வந்து தனது உயிரை பணயம் வைப்பவர்களே சிறந்த வீரர்கள் என சந்தேகமின்றி குறிப்பிட முடியும். பொது நலனுக்காக தனது உயிருக்கு ஆபத்து என தெரிந்தும் பலரது உயிர்களைப் பாதுகாப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த பொலிஸ் வீரர்களுக்கு இன்றையத் தினத்தில் உணர்வுப் பூர்வமாக நினைவுக் கூர்வது குறைந்தப் பட்ச மரியாதையாகும். நாம் அனைவரும் சுதந்திரம் என்ற மூச்சை சுவாசித்து நாம் விரும்பியப்படி நடமாடுகின்றோம் என்றால் அவர்கள் நமக்காக தங்களை அர்ப்பணிப்புச் செய்த காரணத்தினாலயே. இலங்கை பொலிசார் ஒவ்வொறு வருடமும் மார்ச் மாதம் 21 ஆந் திகதியன்று நினைவுக் கூறுவது இன்று நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கான காரணம், பொலிஸ் வீரர்களின் உயிர்த் தியாகமாகும்.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமை நேரத்தின் போது குற்றத்தை தடுப்பதற்காக துணிச்சலாக செயல்பட்டு அக் குற்றச் செயல்களை தடுத்த போது உயிர்த் தியாகம் செய்துள்ளார்.  நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ததில் அவரே பொலிஸ் வீரர்களின் பட்டியலில் முதல் இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உத்துவன் கந்தே சரதியல் என்ற நபரைக் கைது செய்வதற்காக முற்பட்ட வேளை சரதியல் என்பவரின் சகாக்களின் ஒருவரான மம்மலே மரிக்கார் என்பவரால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சபான் அவர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவரை நினைவுக் கூர்வதற்காக கொழும்பு கண்டி பிரதான வீதியில் மாவனெல்லைப் பொலிஸ் பிரதேசத்தில் அவரின் நினைவுச் சின்னத்தை கேகாலை மாவட்டத்திற்குப் பொறுப்பான அப்போதைய அரசாங்க அதிபர் ஈ. ஆர் சொன்டசர் என்பவரால் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

சபான் அவர்களின் உயிர்த் தியாகத்தின் பின்னர் அவர் உயிர்நீத்த தினமே பொலிஸ் வீரர்கள் தினம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 1894 ஆம் ஆண்டில் பொரளைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது கொலைச் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் 289 கே. தம்பிமுத்து என்பவரின் பெயரும் பொலிஸ் வீரர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் கடமைகளின் போது உயிர்நீத்த சபான் தொடக்கம் தற்போது வரை இலங்கை பொலிஸ் இழந்துள்ள பொலிஸ் வீரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இறுதியாக பொலிஸ் வீரர்கள் பட்டியலில் பொலிஸ் சாஜன்ட் 55175 எஸ்.எம் தர்மரத்ன என்பவர் 30.09.2024  ஆந் திகதியன்று கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர் விபத்து ஒன்று ஏற்பட்டு வீதியிலிருந்த செயல்படாத மோட்டார் சைக்கிள் ஒன்றை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது பாதசாரதி கடவையினூடாக இடது பக்கத்திலிருந்து வலதுபக்கத்திற்கு  கடக்கும் போது எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மூன்று தசாப்தக்கால யுத்தம் காரணமாக இலங்கை இராணுவத்தினருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உயிர்த் தியாகம் செய்தது இலங்கை பொலிசாகும். இவ்வாறு 2598 பொலிசார் உயிர்த்தியாகம் செய்துள்ளதுடன், 1575 பொலிசார் யுத்தத்தில் ஊனமடைந்துள்ளார்கள். அதேபோன்று நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக துணிச்சலாக தங்களது கடமைகளில் ஈடுபட்ட போது 3161 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதுடன், 44 பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஊனமுற்றுள்ளனர். இவ்வாறு உயிர்த்தியாகம் செய்துள்ள பொலிஸ் வீரர்களுக்காக இலங்கை பொலிசார் மற்றும் நாட்டின் குடிமக்கள் அனைவரும் பெருமையுடன் பொலிஸ் வீரர்கள் தினத்தன்று நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.

குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் வேறுபாடுன்றி சகல நபர்களினதும் உயிர்களை துட்சமாக மதிக்கும் திட்டமிடப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சமூகத்தை சீரழிக்கும் நோக்குடன் செயல்பட்டுவரும் பொதைப்பொருள் வர்த்தகர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதங்காக பதில் பொலிஸ் மா அதிபர் அவர்களின் மேற்பார்வையில் மற்றும் அவரின் உத்தரவிற்கமைய இலங்கை பொலிசார் நடவடிக்கைகளை மேற் கொண்டுவருகின்றனர். இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அமைதியான சூழலை உருவாக்கி சகலரினதும் உயிர்களை பாதுகாத்து அதை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவுப் பகல் பாராது தங்களது கடமைகளை செய்து வருகின்றனர்.

161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தை 21.03.2025 ஆந் திகதியாகிய இன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பதற்காக யுத்தத்தின் போதும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும் தங்களது உயிர்களை தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் 30 பேர் மற்றும் ஊனமுற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 20 பேருக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களினால் பொலிஸ் சேமைப் படை தலைமையகத்திலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மாலைகள் அணிந்து நினைவுக் கூர்தல், அப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவத்துடன் வரவேற்று அவர்களுக்கு பொலிஸ் மா அதிபர் அவர்களின் கரங்களினால் சகலருக்கும் சாசோலை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

161ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தை மிகவும் உணர்வுடன் நினைவு கூர்வது இலங்கை குடிமக்களின் கடமையாகும்

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .