2025 மே 20, செவ்வாய்க்கிழமை

த.தே. கூட்டமைப்பாக இருப்பதன் வேதனை

Super User   / 2011 ஓகஸ்ட் 08 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டவாறே ஒன்பதிலிருந்து ஐந்தாக குறையவுள்ளமை தமிழ் மக்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இதுபற்றி பேசவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு பொறுப்புள்ள முறையாகும். அரசாங்கம் தற்போதைய நிலைமையை பொறுப்புணர்வுடன் கவனத்தில் எடுப்பதுடன் ஆலோசனைகளை திறந்த மனதுடன் ஆராயவேண்டும்.

இந்தியாவில் சனத்தொகை வளர்ச்சி பிராந்தியத்துக்கு பிராந்தியம் வேறுபடுகின்றது. தென் மாநிலங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்குமான நாடாளுமன்ற இடங்களின் (ளுநயவள) எண்ணிக்கையை மாறாது வைத்திருப்பதை உறுதி செய்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளிடையே வாக்காளர்களை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் மாற்றங்களை கொண்டு வரும் முயற்சிகள் கடந்த தசாப்தத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதன் நோக்கம் சகல தொகுதிகளிலும் ஓரேயளவான வாக்காளர்களை கொண்டிருப்பதாகவன்றி மக்கள் தொகையை நிர்வகிக்க இயலுமான அளவுக்குள் வைத்திருப்பதாகவே இருந்தது.

வரலாற்றுக் காரணங்களால், இந்தியாவின் சில நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு மாநகர சபையின் வட்டாரம் ஒன்றில் உள்ளதைவிட குறைவான வாக்காளர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறான தொகுதிகள் பிரதானமாக யூனியன் பிரதேசங்களில் அல்லது வடகிழக்கு மாநிலத்தில் காணப்படுகின்றன.

இன்னொரு தசாப்தத்திற்கு மாகாணம் ஒன்றிலுள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மாறாது வைத்திருப்பதுபற்றி இலங்கை யோசிக்கலாம். இதை 2021 குடிசனமதிப்பீட்டின் பின் மீளப்பரிசீலிக்கலாம். அந்த நேரத்தில் யுத்தத்தால் உண்டான ஏற்றத்தாழ்வு மறைந்திருக்கும். யாழ்ப்பாணத் தமிழர்கள் அந்த நேரத்தில் தமது நிரந்தர வதிவிடம் பற்றி இலங்கையில் வாழப்போகின்றார்களா அல்லது வெளிநாட்டில் வாழப்போகின்றார்களா என்பதையிட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பர்.

பலர் ஏற்கத் தயங்கினாலும் ஒரு விடயத்திலாவது அரசாங்கம் கூறியது சரி என்பதை அண்மையில் நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிரூபித்துள்ளது. முந்திய தேர்தலிலும், ஜனாதிபதி தேர்தலிலும் குறைந்தளவிலேயே வாக்களிக்கப்பட்டதற்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட அங்கு உண்மையில் வாழும் வாக்களார்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே காரணம் என அரசாங்கம் கூறியது. அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.

யுத்தம் முடிந்தபின் தேர்தல் ஆணையகம் வாக்காளர் இடாப்புகளை புதுப்பித்தபோது, 816,005 பேராக இருந்த வாக்காளர்கள் 484791  ஆக குறைந்துவிட்டனர். இது கிட்டத்தட்ட அரைவாசியாகியது போன்றதாகும். யுத்தத்தாலும் இயற்கை அழிவுகளாலும் உண்டான மரணங்கள், யுத்தம் காரணமாக யாழ்ப்பாண மக்கள் வெளிநாடுகளுக்கும், இலங்கையின் வேறு பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்தமை ஆகிய காரணங்களால் இது விளைந்தது.

ஜே.வி.பியின் இரண்டாவது எழுச்சிக்குப்பின் இவ்வாறான நிலை தெற்கில் ஏற்படவில்லை. வடக்கு, கிழக்கு யுத்தத்துடன் ஒப்பிடும்போது  இந்தப் போராட்டம் குறுகிய காலத்ததாக இருந்தது. இதன்போதும் பெருமளவு உயிரழப்பு ஏற்பட்டிருந்தாலும், 30 வருடம் பீடித்த இனத்துவ யுதத்துடன் ஒப்பிட முடியாதது. ஜே.வி.பியின் போராட்டத்தின் பின் மாவட்டம் ஒன்றின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மாறவில்லை.
வடக்கில் கூடுதலான சதவீதத்தினர் வாக்களித்தமையால் என்ன காரணத்தாலோ த.தே.கூ கூடிய பங்கு வாக்குகளை பெற வைத்துள்ளது. இது யுத்தத்தின் பின் இலங்கையின் தங்கியுள்ள தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக கொள்ளலாம். தமிழ் மக்கள் சார்பில் எதையும் செய்யமுன் தமிழ் மக்களின் மனோநிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்பதை த.தே.கூ. மனங்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் மிதவாத தமிழ் தலைமை தமிழ் மக்களின் மனோநிலையை சரியாக புரிந்து கொள்ளதாக காரணத்தினால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இந்திய ஒப்பந்தம் முறிந்து போய் பெரும் துன்பம் ஏற்பட்டது. சந்திரிகாவின் வாக்குறுதிகளும் இவ்வாறானதே.

த.தே.கூட்டமைப்பு அரசுடன் பேசும்போது தளம்பாதிருக்க வேண்டும். தமிழ் சமுதாயத்திலிருந்து வரக்கூடிய பேச்சுவார்த்தைகளை முறித்துவிட எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி எச்சிரிக்கையாக இருக்கவேண்டும். உலகுக்கும்  உலகெங்கிலும் பரந்துள்ள தமிழ் குழுக்கள், உள்ளூராட்சி பெற்றுக்கொண்ட வெற்றியை தனிநாட்டுக்கான வாக்கு எனப் பாராட்டியுள்ளன. இவ்வாறு முடிவெடுக்கக் கூடிய சக்திகள் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கலாம். தமிழ் தலைமை தடுமாறாமலும் துணிவுடனும் செயற்படவேண்டும். தமிழ் தலைமை முன்னரைவிட தெளிவாக தமது இலக்குகளையும் விருப்பங்களையும் அறிவிக்க வேண்டும்.

அரசாங்கமும் அரசாங்கம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும் தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். த.தே. கூட்டமைப்பின் வெற்றியை பிரிவினைக்கான அங்கீகாரமாக காட்டுவதற்கான முயற்சி மேலோட்டமானதாகும். இலங்கையில் வாழும் தமிழர்கள் தற்போதைய தமது வேதனைகளிலிருந்து கௌரவமாக விடுபடுவதற்கு விரும்புகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ளுதல் அக்கறை மிக்கதாகவும் நேர்மையாகவும் அமையும். இவர்களின் நியாயமான கவலைகள் மற்றும் அபிலாஷைகளை திருப்தி செய்யக்கூடிய அதிகாரப்பரவலாக்கலை வழங்குதல் போதுமானது.

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)


You May Also Like

  Comments - 0

  • kajan Wednesday, 10 August 2011 04:19 PM

    எதுவு நல்லதாக nadakkaddum.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X