Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 01 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது காணப்படும் நிலைமையில், இலங்கையின் அரசியல் மற்றும் அரசியல் தலைமைத்துவம் என்பவற்றின் எதிர்கால போக்கை தீர்மானிக்க போவது எது அல்லது யார்?
இவற்றை தீர்மானிக்கப் போவது ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ அல்லது பாரிய அபிவிருத்தி வேலைகளில் ஈடுப்பட்டுள்ள யுத்த வெற்றியாளனான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ அல்ல.
தவறான காரணத்துக்காகவும், யுத்தம் முடிந்தபின் தரப்படும் என வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு இட்டுச் செல்லாத சமாதான பேச்சுவார்த்தை காரணமாகவும் செய்திகளில் பேசப்படும் தமிழர்களோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்ல. மீண்டும் தவறான காரணத்தால் கிறீஸ் பேய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் தொடர்பான சம்பவங்களால் செய்திகளில் வருகின்றன முஸ்லிம் சமுதாயமோ அல்ல இவற்றை தீர்மானிக்கபோவது.
இலங்கையில் எதிர்ப்பை அரசியலை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே. ஐக்கிய தேசிய கட்சி அவ்வப்போது செய்தியில் அதுவும் பிழையான காரணத்துக்காவே அடிபடுகிறது. இந்த கட்சியின் உட்பூசல்கள் அதன் ஆதரவாளர்களையும் நட்பு சக்திகளையும் ஏன் எதிரிகளையும்கூட அலுக்கச் செய்துள்ளன.
ஐ.தே.க, தொடர்ந்தும் இந்த சுய அழிவுப்பாதையிலேயே செல்லுமாயின் ஐ.தே.க.வின். உட்பிரிவுகளுக்கு மோதிக்கொள்வதற்கு எதுவுமே எஞ்சியிருக்கப் போவதில்லை. இதை ஐ.தே.க.வின் உயர்பீடங்கள் விளங்கிக் செயற்படுவதாக இல்லை.
இந்த நாட்டின் அரசியல் வேறு இடங்களில் நடப்பது போலவே ஒரு வட்டப்பாதையிலேயே செல்கின்றது. பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மாறி மாறி பதவிக்கு வந்துள்ளன. இவ்வாறே நீண்ட காலம் அதிகாரம் இல்லாமலும் இருந்துள்ளன. இவர்கள் இதற்கு தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அதை இயல்பாகவே எடுத்துக்கொள்ளகின்றன. இதனால் இதை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுமில்லை.
இந்தக் கட்சிகள் அதிகாரத்திலிருக்கும்போது நடந்துக் கொள்ளும் முறையினால் ஆட்சியதிகாரத்தை இழந்து வருகின்றன. இக்கட்சிகள் எதிர்க்ட்சியாக இருக்கும்போது இவற்றின் பலவீனம் மிக நன்றாகவே புலப்படும். இந்த பலவீனங்கள் தேர்தலில் தோல்வியடைவதற்கான வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும். இது ஒரு நச்சுவட்டமாகும்.
தேர்தல் வரும்போது மக்கள் கூட்டமாகவே வாக்களிக்கின்றனர். ஊடகங்கள் முதன்மைப்படுத்தும் உயர்மட்ட பிரச்சினைகளுக்காக இவர்கள் வாக்களிப்பதில்லை. இந்த இரண்டு பெரிய கட்சிகளுமே தாம் எதை செய்தாலும் செய்யாது விட்டாலும் ஒரு கட்டத்தில் மக்கள் தம்மை பதவியிறக்குவர் என்பதை அறிந்தவர்கள் போலவே நடந்துக்கொள்கின்றன. இதுபோலவே இவர்கள் பதவியில் இல்லாத காலத்தில் எதைச் செய்தாலும் செய்யாது விட்டாலும் மக்கள் தம்மை மீண்டும் பதவிக்கு கொண்டுவருவர் என்பதையும் அறிந்துள்ளனர். இவர்கள் இதையிட்டு திருப்தியோடுள்ளனர்.
ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் அளவுக்கதிகமாக குவிந்துள்ளதாக கூறுவோர் இது தனியாளுடன் மட்டும் தொடர்பானதல்ல என்பதையும் அதிகாரத்துக்கான விருப்பு தேசிய மனப்பாங்காக உள்ளது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். இதற்கு தற்போதைய ஐ.தே.க நல்ல உதாரணமாக உள்ளது. ஏனைய கட்சிகளும் குறைந்தவை அல்ல.
சிறுபான்மைக் கட்சிகளும் சிறுகட்சிகளும் விதிவிலக்கானவை அல்ல. இவ்வாறே இவற்றிலிருந்து அவதாரம் பெற்ற போராளிகளும் உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வித்தியாசமான சேர்வையாகும். அதிகாரத்திலுள்ள கட்சி நடத்துகின்ற அதிகாரப் பகிர்வு அரசியலே தமிழ் தேசிய கூட்டமைப்பை இயங்க வைப்பதாக உள்ளது.
யுத்தத்துக்கு பிந்திய இந்த நாட்டின் அரசியல் ஒரு நேரிய பாதையில் செல்ல வேண்டுமாயின் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைமையை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.தே.க.வும் தன்னைத் தானே கவனித்துக்கொள்ள வேண்டும். இந்தகட்சி விழுந்துள்ள இருள் கிடங்கிலிருந்து வெளிவர முடியாது போயின் நாடு இதை மறந்து தன்போக்கில் செல்லும் நடக்கப்போவது என்ன என்பது தெளிவாகவே உள்ளது. இக்கட்சி அதன் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்க வேண்டும்.
ஐம்பதுகளில் ஐக்கிய தேசிய கட்சி, கட்சியில் நடப்பதைப்பற்றியும் நாட்டில் நடப்பதுப்பற்றியும் அக்கறைப்படாமல் இருந்தமையால் போட்டியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோன்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது போனபோது தீவிரவாத ஜே.வி.பி. தோற்றம் பெற்றது.
இப்போது மீண்டும் குட்டை குழப்பப்பட்டுள்ளது. ஐ.தே.க.நாட்டுக்கு தேவையானபடி இயங்காதுவிடின் நாடு இக்கட்சியை கவனிக்காது விட்டுவிடும் அல்லது சரத்பொன்சேகா போன்ற புதியவர்களை கொண்டுவரும். சரத் பொன்சேகா ஐ.தே.க.விற்கு சில விடயங்களை சுட்டிக் காட்டினார். ஆவர் பிழையான நேரத்தில் சரியான இடத்திலிருந்து பிழையான மனிதனாக இருந்தவர். சீர்த்திருத்தங்கள் கொண்டுவரும் நேரத்தில் சிலவேளை ஐ.தே.க. கட்சிக்கு இன்னொரு இன்னிங்க்ஸ் கிடைக்காமல் போகலாம்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எது எல்லாம் பொருந்துகின்றதோ அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொருந்தும். இக்கட்சிகள் தொடரும் அரசியல் செயற்பாட்டின் அங்கங்களாகும். இவை அரசியல் கட்சிகள் மட்டுமே என ஆகாது.
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)
NAKKIRAN Friday, 02 September 2011 04:20 AM
UNP உண்மையான எதிர்க்கட்சிபோல் செயல்படவில்லை. அது ஆளும்கட்சிபோல் நடந்துகொள்கிறது. ஒரு நாட்டில்
ஒழுங்கான எதிர்க்கட்சி இல்லை எனில் அந்தநாடு மோசமான நிலமைக்கு சென்றுவிடும். IRAq ,LIBIYA , ---
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
40 minute ago
42 minute ago